அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணை தலைவர் சுகதேவ், மாவட்ட துணை செயலாளர் குமார், அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகி கவிதா, வட்டார தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் வரவேற்று பேசினார். மாநில பிரசார செயலாளர் சுகமதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் டாஸ்மாக் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பொது வினியோக திட்ட விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story