காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

காவேரிப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத்தலைவர்கள் சேகர், விவேகானந்தன், ரகமத்துல்லா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அதானியின் உருவ பொம்மையை எரித்தும், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story