பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி ஆகிய கிராம கிளை சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். கோட்டநத்தம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தப்பன், விவசாய சங்க தலைவர் கூலிபட்டி சர்ச்சில், துணை தலைவர் வெள்ளலூர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் அடக்கிவீரணன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். பால் உற்பத்தியாளர்களுக்கு தொடர்ந்து கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும், மாட்டு தீவன விலை உயர்வதும், பராமரிப்பு செலவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆகவே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பால் லிட்டருக்கு ரூபாய் 40 வழங்கிட வேண்டும், தீவன மூட்டை ஒன்றுக்கு ரூ.200 மானியத்தொகையை திரும்ப கொடுக்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதில், பால் கறவை மாடுகளை வளர்க்கும் கிராம பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story