சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா எம்.பி.யை கைது செய்யக்கோரி சேலத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம்
இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரியும், டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும் சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம், தமிழக விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராஜாத்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வைரமணி, மாநிலக்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜனதா எம்.பி.யை கண்டித்தும், அவருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story