மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு
எலச்சிபாளையம் அடுத்த 87 கவுண்டம்பாளையம் ஊராட்சி குமரமங்கலம் இந்திரா நகரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. மர்மநபர்கள் அரசு நிலத்தில் உள்ள பனைமரம், வேப்பமரம் உள்பட 100-க்கும் மேற்பட்ட மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் வெட்டி கடத்தி எடுத்து சென்று விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சத்திவேல், கிட்டுசாமி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சத்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.