சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-யை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சின்னதம்பி, துணைத்தலைவர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story