சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 39-வது அமைப்பு தின கொடியேற்றம் மற்றும் காலை சிற்றுண்டியை அமைப்பாளர்களே வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியத்தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் மஞ்சுளா கொடி ஏற்றி வைத்து பேசினார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வெங்கடேசன் வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டியை தயார் செய்யும் பணியையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சத்துணவு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.
Next Story