மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் வில்சன், மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், ஜெயபாரத், சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு குழுவில் சங்கத்தை இணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் கோட்டாட்சியர் தலைமையிலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கலெக்டர் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். வீட்டுமனை பட்டாவிற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும். வத்திராயிருப்பு தாலுகா மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள மனுக்களை தொடர்ச்சியாக நிராகரிக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.