சிதம்பரத்தில்கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்28 பேர் கைது


சிதம்பரத்தில்கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்28 பேர் கைது
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இந்த கோவிலுக்கு செல்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு நேற்று மதியம் 2.30 மணிக்கு காரில் வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், 3.15 மணிக்கு சீர்காழி கோவிலுக்கு புறப்பட்டார். இதனிடையே கவர்னர் வருகையை அறிந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அவருக்கு கருப்பு கொடி காட்டி சிதம்பரம் வண்டிகேட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

28 பேர் கைது

சிதம்பரம் தீட்சிதர்களின் சட்ட விரோத குழந்தைகள் திருமணத்தை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்த கவர்னரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட துணை செயலாளர்கள் வி.எம் சேகர், குளோப், வட்ட செயலாளர் தமிழ்முன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story