ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வண்ணார் சாதி சான்றிதழில் இருந்த சலவை தொழிலாளி என்ற பெயரை நீக்கிய அரசாணையை உடனடியாக அமல்படுத்தி வண்ணார் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், வண்ணார், மருத்துவர், ஒட்டர், போயர், குலாளர், ஆண்டிபண்டாரம் போன்ற சிறு குறு சமூகங்களை இணைத்து மிக பிற்படுத்தப்பட்ட பட்டியலை உருவாக்க வேண்டும், வண்ணார், மருத்துவர் சாதிகளுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வண்ணார்பேரவை மாவட்ட துணை செயலாளர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மக்கள் கட்சி நிறுவன தலைவர் மணிபாபா கருத்துரை வழங்கினார். தமிழக தேச மக்கள் முன்னணி பாண்டியன், பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா, ஆதிதமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ்முருகன், ஆதிதமிழர் கட்சி மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story