வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முதுகுளத்தூர் வருவாய் அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் வருவாய் அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். வட்டார கிளை தலைவர் பெரியசாமி வரவேற்றார். இதில் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் என்பவர் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மணல் கொள்ளையர்களை கண்டித்தும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் முருகேசன் மண்டல துணை வட்டாட்சியாளர்கள் மீனாட்சி, சுந்தரம், சங்கர், அய்யாதுரை, பொருளாளர் சிங்கமுத்து, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story