எருமப்பட்டியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டி
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் எருமப்பட்டி 5 ரோட்டில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பழனி நகரில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடை என 3 டாஸ்மாக் கடைகளையும் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளன. எனவே அவற்றை இடமாற்றம் செய்யக் கோரியும், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சந்து கடைகளை மூட கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லட்சுமணன், மாவட்ட பொருளாளர் சிவசந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக 3 டாஸ்மாக் கடைகளையும் ஊருக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், சந்துக்கடைகளை மூட வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.