ஆர்ப்பாட்டம்
மேலூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலூர்,
மேலூர் தாலுகா அலுவலகத்தில் உதவித்தொகைக்காக மனுகொடுக்கும் மக்களை அலைய விடுவதாகவும், வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகவும் கூறி அதனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மேலூர் தாலுகா குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலைவர் பி.குமரன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், ஒன்றியச் செயலாளர் ஏ.தனசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வீ.அடக்கிவீரணன், தாலுகாச்செயலாளர் ஏ.ராஜேஸ்வரன், சி.ஐ.டி.யு. தாலுகா தலைவர் எஸ்.பி.மணவாளன், தாலுகா செயலாளர் சேகர், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி மாவட்டச்செயலாளர் கரு.கதிரேசன் பி.எஸ்.ராஜாமணி ஆகியோர் பேசினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, சங்கத்தின் தாலுகா பொருளாளர் கே.கணேசன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.