பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 2:23 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்துள்ள புதுப்பாளையம் அக்ரஹாரம் ஊராட்சி நிர்வாக பகுதியில் புதுநகர், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் புதுப்பாளையத்தில் இருந்து வசந்த நகர், புளியங்காடு, காட்டூரிலிருந்து, ராகவானந்தா நகர் செல்லும் தார் சாலைகள் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் தார் சாலைகள் அமைக்காததை கண்டித்தும், புதுப்பாளையம் அரசு பள்ளியின் அருகில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் புதுப்பாளையம் கிளை சார்பில் புதுப்பாளையம் ரேஷன் கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், கட்சி ஒன்றிய குழு செயலாளர் ரவி, கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story