ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற ஊழியர் நலச்சங்க அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் நலச்சங்க அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகங்களில் பணி ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்தக்கூடாது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அனைத்து வழித்தடங்களிலும் பஸ்களை இயக்க வேண்டும். பணியின் போது இறந்த போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story