மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
மத்திய அரசின் மக்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், அதானி மீதான முறைகேட்டை பாராளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உட்படுத்த கோரியும் கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி மற்றும் சி.பி.ஐ. சார்பில் ஜவகர்பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் வடிவேலன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினம், ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story