காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்
மானூரில் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானூர்:
மானூர் மெயின் பஜாரில் பஸ்நிறுத்தம் அருகே நேற்று மானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மானூர் வட்டார தலைவர் பாக்கியகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணம், மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு விற்கக் கூடாது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் முதலீடுகளை தனியார் குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்க கூடாது, முதலீட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் அனந்தபத்மநாபன், நூருல்ஹக், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.