இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
x

இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து பெரம்பலூர் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் இளைஞரணி தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். தி.க. மாவட்ட தலைவர் தங்கராசு, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தி.க. மாணவரணி செயலாளர் ராஜா வரவேற்றார். முடிவில் அமைப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


Next Story