சரக்கு சேவை வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் சரக்கு சேவை வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரி உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்துக்குமார், மாநில பொருளாளர் அருண், மக்கள் ஜனநாயக இளைஞர் கழக நிர்வாகி திருமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (எம்.எல்) மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி பாண்டியன், கூட்டமைப்பு நிர்வாகிகள் முனுசாமி, பெரியண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஏழை, எளிய மக்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு மற்றும் பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்வு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.