கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம், நீடாமங்கலத்தில் நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலா் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், வட்டத் தலைவர் வீரமணி, துணைத் தலைவர் ராஜா உள்ளிட்ட 38 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸை கொலை செய்த மணல் கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story