மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அம்மா உணவகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் காவிரிநாதன் தலைமை தாங்கினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story