சென்னையில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்-சீமான் அறிவிப்பு
இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்னர். இது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டம் செய்தனர். இந்நிலையில் மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தடுக்க தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story