என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர்
மந்தாரக்குப்பம்:
நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு இடம் கொடுத்து வாழ்வாதாரத்தை இழந்த கிராம மக்களுக்கு சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை தர மறுக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், சுரங்க நீரை பாசனத்துக்கு தரக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கொளக்குடி ராமன், கீழ்வளையமாதேவி பாலம்மா, கருங்குழி ராஜேஸ்வரி, துறிஞ்சி கொல்லை மயில்வேல், மும்முடி சோழகன் ஜெயலட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story