பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் சி.சரவணன் தலைமை தாங்கினார். சி.பி.ஸ் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி மணிகண்டன் முன்னிலை வகித்தார். முனியசாமி, சத்துணவு அலுவலர்கள் சங்க மாநிலபொதுச்செயலாளார் நூர்ஜகான், சுகாதார போக்குவரத்து துறை மாநில தலைவர் நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். அரசுஊழியர்கள் சங்கம் சார்பில் கல்யாணசுந்தரம், பரமேஸ்வரன், மாரியப்பன், ஐ.சி.டீ.ஸ். மேனகா, ரோஸ்லின் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
முடிவில் பிரேமானந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story