ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் கண்டனம் தெரிவித்து பேசினார். தளுகை ஊராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தளுகை ஊராட்சி மன்ற நிர்வாக சீர்கேடுகளை சீர்படுத்தவும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தலையீட்டை தடுத்து நிறுத்தவும், செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தளுகை பாதர்பேட்டை ரேஷன் கடை முன்புள்ள ஆக்கிரப்பை அகற்றி, கம்பி வேலி அமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் மருதை தலைமையில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story