கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை
மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேற்கு 1-ம் பகுதிக்குழு சார்பில் திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் மீது பா.ஜ.க. தொண்டர்களின் தொடர் தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் சம்மபட்டிபுரத்தில் இருந்து சொக்கலிங்க நகர் வரை பகுதி குழு செயலாளர் கணேசன் தலைமையில் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்டச் செயலாளர் கணேசன் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில குழு உறுப்பினர் விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story