துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி, நகராட்சிகளில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், அலுவலக மொழியாக இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் நமது தேசம் கட்சி சார்பில் அரக்கோணம் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாநில தலைவர் லட்சுமிபதி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். மக்கள் ஜனநாயக இளைஞர் கழக முருகன் கண்டன உரையாற்றி முடித்து வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஏ.பி.எம்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story