'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x

ஆரணியில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆர். சிலை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஆரணி நகரில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவல நிலையை கண்டித்தும், 'அக்னிபத்' திட்டத்தை கைவிடக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் நிர்வாகிகள் பி.கண்ணன், வெ.மன்னார், விருஸ்பவ தாஸ், ரமேஷ்பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story