அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x

தேனியில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில், முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேகுவேரா, விஸ்வா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

அதுபோல், ஆதித்தமிழர் பேரவை சார்பில், அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story