கோவில்பட்டியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு இந்திய ராணுவத்தில் முப்படை களிலும் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை கைவிடக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவில்பட்டி பொறுப்பாளர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட நிர்வாகி மோகன்தாஸ், இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க கோவில்பட்டி நகர செயலாளர் அந்தோனி செல்வம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சக்திவேல் முருகன், அனைத்து வகை மாற்றுத்திறனாளி சங்க மாநிலச் செயலாளர் முத்து காந்தாரி உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story