மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யு., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, நகர்ப்புறத்திலும் அந்த வேலையை விரிவுபடுத்த வேண்டும். அந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது. உரம், பூச்சி மருந்து விலையை குறைக்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்த வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்ட தொழிலாளர் சட்ட தொகுப்பை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story