5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வு மற்றும் பால், நெய் போன்ற பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகில், அண்ணா கலையரங்கம் அருகில், சலவன்பேட்டை, விருபாட்சிபுரம் ஆகிய 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பபிரிவு வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், துணை செயலாளர் ஜெயப்பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர்கள் குட்டி லட்சுமி சிவாஜி, ரவிபாபு, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே. எஸ்.சுபாஷ், பகுதி செயலாளர்கள் சொக்கலிங்கம், நாராயணன், பேரவை ரவி, ஜனார்த்தனன், சுந்தரம், ஏ.ஜி.பாண்டியன், ஜெய்சங்கர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.பி.ரமேஷ், அருணா விஜயகுமார், அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ. ராஜா, வி.எல்.ராஜன, தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மாவட்ட தலைவர் சுரேஷ், சத்துவாச்சாரி பகுதி அவைத்தலைவர் ஜி.எஸ்.ஏ.ஆறுமுகம், வட்ட செயலாளர் ஜி.கே.முரளி குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.