அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி பிரச்சினையில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.
காவிரி பிரச்சினையில் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீடு திட்டத்தில் சேர்க்காமலும் விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்த தி.மு.க. அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
அதன்படி தஞ்சை கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (தஞ்சை மத்தி), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.
பச்சைத்துண்டு அணிந்து பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கக்கரை சுகுமார், திருப்பதி வாண்டையார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பச்சைத்துண்டு அணிந்து பங்கேற்றனர், ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மாவட்ட அவைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் பஞ்சாபிகேசன், புண்ணியமூர்த்தி, மனோகர், சதீஷ்குமார், நாகராஜன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கும்பகோணம் மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.