அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கோழிப்போர்விளையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

தக்கலை,

மின்கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்தும், குளச்சல் பகுதியில் மீனவர்களுக்கான ஹெலிகாப்டர் தளம், குலசேகரத்தில் ரப்பர் பூங்கா அமைக்க வலியுறுத்தியும் தக்கலை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோழிப்போர் விளையில் உள்ள தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட்தாஸ் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ரமேஷ், துணைச்செயலாளர்கள் ஸ்ரீதரன், சதீஷ்ணகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது நிர்வாகிகள் கருப்பு துணியால் கண்களை கட்டியவாறு விலைவாசி உயர்ைவ கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இ்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அனூப், தொழில்நுட்ப பிரிவு தினேஷ், சிறுபான்மை பிரிவு ஜாண்கென்றி, மாவட்ட பிரதிநிதி ஐடா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், மத்திகோடு ஊராட்சி தலைவர் அல்போன்சாள், முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கமணி, தொழில்சங்க செயலாளர் விஜயகுமார், தோட்ட தொழில்சங்க தலைவர் விஜு, குலசேகரம் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story