அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
வலங்கைமான்:
மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து வலங்கைமான் கடைத்தெருவில் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கொண்டு வந்த நலத்திட்டங்களை நிறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக முதியோர் உதவித்தொகை தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, அம்மா கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தமிழக அரசின் முதல் திட்டமாக உள்ளது.
கோஷங்கள்
சொத்து வரி உயர்வு, மின்கட்டணம், பால்விலை உயர்வு தான் தி.மு.க. அரசின் சாதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய குழு தலைவர் கே.சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன், நகர செயலாளர் சா.குணசேகரன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெயஇளங்கோவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சாந்தி தேவராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், முனிசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அ.தி.மு.க.வின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பேரளம்
இதேபோல் பேரளம் கடைவீதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்காமராஜ் எம்.எல்.ஏ. ஆலோசனைப்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். பேரளம் பேரூர் பேரூராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.