அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஏரலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏரல்:
ஏரல் பேரூராட்சி அ.தி.மு.க. மற்றும் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஏரலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏரல் தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட வேண்டும். ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும். ஏரல் வாரச்சந்தையை ஆற்றுப்பாலம் அருகில் உள்ள 77 சென்ட் இடத்திற்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில் ,ஏரலில் 50 ஆண்டு காலத்திற்கு மேலாக செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்தால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.