அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் அவல நிலை, சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை, அரசு அதிகாரிகள் கொலை, போதைப் பொருள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின்கட்டணம், வீட்டுவரி, சொத்து வரி உயர்வு, கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பங்கேற்றவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி, நகர துணை செயலாளர் மாதவராஜ், நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story