தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏரல்:
சொத்து வரி, வீட்டு வரி, மின்கட்டணம், பால் விலை போன்றவற்றை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆலோசனைப்படி, சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து ஏரல் பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில், பேரூராட்சி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, ஸ்ரீவைகுண்டம் யூனியன் தலைவர் வசந்தா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
இலக்கிய அணி இணை செயலாளர் உமரிக்காடு ரமேஷ், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார், ஏரல் நகர ஜெ.பேரவை செயலாளர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருங்குளம்
இதேபோல் பெருங்குளம் பேரூராட்சி சார்பில் பண்டாரவிளை மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் எஸ்.புவனேஸ்வரி சண்முகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நகர செயலாளர் வேதமாணிக்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்ராயம், மாவட்ட ஓட்டுனர் அணி இணை செயலாளர் பாஸ்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரம் பஸ்நிலையம் முன்பு நகர அ.தி.மு.க சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் அரிக்கேன் விளக்குகளை ஏந்தியும், காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோன்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பும், புதூர் பஸ் நிலையம் முன்பும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆத்தூர்
ஆத்தூர் பேரூராட்சி மன்றம் அருகில் நகர அ.தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளரும், இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளருமான என்.சின்னத்துரை, தூத்துக்குடி பகுதி செயலாளர் முருகன், ஆத்தூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், ஆத்தூர் நகர அவைத்தலைவர் அண்ணாமலை சுப்பிரமணியம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி-சாயர்புரம்
உடன்குடி நகர அ.தி.மு.க. செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில், உடன்குடி பஜார் பாரதி திடலில் ஆர்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். உடன்குடி ஒன்றிய செயலாளர் தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர் முருங்கை மகாராஜா, ஒன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம் மீன் கடை தெருவில் நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் துரைச்சாமி ராஜா தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணைத்தலைவர் விஜயன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆழ்வார்திருநகரி-ஆறுமுகநேரி
ஆழ்வார்திருநகரி காமராஜர் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், நகர அவைத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவசுப்பிரமணியன், பொருளாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி மெயின் பஜாரில் அ.தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் செயலாளர்கள் அமிர்தராஜ், பெரியசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி, அவைத்தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட துணை செயலாளர் செரீனா பாக்கியராஜ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், காயல்பட்டினம் நகர செயலாளர் காயல் மவுலானா, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் தீபா, சிவக்குமார், தயாவதி, புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் காசிவிஸ்வநாதன் நன்றி கூறினார்.
தென்திருப்பேரை
தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், தென்திருப்பேரை நகர செயலாளர் ஆறுமுக நயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.