அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் பா.ஜனதா அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவி பாண்டிச்செல்வி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பலர் பேசினர். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்த குஜராத் பா.ஜனதா அரசை கண்டித்தும், பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story