அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் மக்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் காத்தவராயன் தலைமை தாங்கினார். மாநில குழு எஸ்.டி.சங்கரி, குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், திராவிடர் கழக மண்டல பொறுப்பாளர் சடகோபன், மூத்த வழக்கறிஞர் சம்பத்குமார், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கே.விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஆனந்தன், மாவட்ட குழு சாமிநாதன், பேரணாம்பட்டு தாலுகா செயலாளர் சரவணன், ம.தி.மு.க.வை சேர்ந்த பழனி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடந்த பாலியல் வன்முறைகளை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.