மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து பழைய பஸ் நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வு, அடித்தள மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மின் கட்டண உயர்வு, பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசார் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் தொடர்ந்து நடந்துவரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள், சட்டம் சீர்குலைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர். இதில், பெரம்பலூர் நகர செயலாளர், மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story