நெல்லையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மின்சார கட்டண உயர்வை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் ஆவின் அண்ணாசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் குமரேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்தும், அதனை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story