பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி
உத்தமபாளையத்தில் உள்ள கல்லூரி சாலை பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர்அங்குள்ள வீடுகள் முன்பு தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்தி்டம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகரத் தலைவர் தெய்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கபொன்ராஜா முன்னிலை வகித்தார். நகர பொதுச்செயலாளர் மாரிராஜா, துணைத் தலைவர்கள் செல்வராஜ், முத்துசரவணன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story