பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகே அறிவொளி பூங்கா எதிரில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளர்கள் ரமேஷ், சதீஷ், முருகன், மாவட்ட துணைத்தலைவர் இறை மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைத்தலைவர் அருணை ஆனந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் ஆதவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜதமயந்தி, கருணாகரன், மாவட்டச் செயலாளர்கள் ராஜலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, குமார்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் திருமாறன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story