காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது பொய்வழக்குப் போட்ட டெல்லி தலைநகர் போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் டாக்டர் மணி, சீனுவாசன், வீராசாமி, அண்ணாச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் என்.வெற்றிச்செல்வன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பொய்வழக்குப் போட்ட டெல்லி தலைநகர் போலீசாரை கண்டித்தும், நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் பழிவாங்கும் போக்கில் தலைவர் ராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ததைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், காமராஜ் மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் டி.கதிர்காமன் நன்றி கூறினார்.