காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர் தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், ராகுல்காந்தி ஆகியோர் மீது பொய் வழக்குப் போட்ட டெல்லி போலீசாரின் அடக்குமுறையை கண்டித்தும், நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் பழிவாங்கும் போக்கில் தலைவர் ராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ததைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கீழ்பென்னாத்தூர் வட்டாரத் தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராமதாஸ், அருண், வட்டாரத் துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, ஏழுமலை, நகர துணைத் தலைவர் பாக்கியராஜ், விவசாய பிரிவு தலைவர் நாராயணன், கிளை தலைவர் சுப்பிரமணி, நிர்வாகிகள் பாஷா, ராமச்சந்திரன், பிரபு மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டார, நகர காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.