காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், துணைமேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் மேகநாதன், பன்னீர்செல்வம், கவுன்சிலர் கிரிஜா, நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, நிஷார், சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story