காங்கிரஸ் கட்சியினா் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஆஷாபிஜாகிர்உசேன், மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட முன்னாள் தலைவர் இளையராஜா, வக்கீல் முகமதுபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி இதாயத்துல்லா வரவேற்றார். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மீது நேஷனல் ஹெரால்டு பொய் வழக்குப்பதிவு செய்து, விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அலைக்கழித்து வரும் அமலாக்க துறையையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி கவுன்சிலர் தேவராஜ், வட்டார தலைவர்கள் அபுல்கலாம், ராஜேந்திரன், முத்தமிழ் கண்ணன், கொளஞ்சியப்பன், இளையபெருமாள், பாலசுந்தரம், சக்திவேல், கோவிந்தராஜ், அமுதா, பாலகிருஷ்ணன், நகர தலைவர் மண்ணாங்கட்டி, தேசிய மாணவர் காங்கிரஸ் நிர்வாகி ஆதில்கான், நிர்வாகிகள் பஷீர், சீனுவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.