கையில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கையில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அரக்கோணத்தில் கையில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு,எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீத்தம் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மாலை அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியின் மாநில ஜவகர்பால் மஞ்ச் தலைவர் நரேஷ் தலைமையில் கையில் தீப்பந்தம் ஏந்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொது செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் லட்சுமிபதி, மாவட்ட செயலாளர் கவுரி, நகர செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொது செயலாளர் பொன். சந்திரசேகர் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் தீப்பந்தங்ளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story