காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

திருவட்டார்:

ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்ததை கண்டித்து பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் சார்பில் திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கியில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவட்டார் மேற்கு வட்டார இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர் வில்சன், கிழக்கு வட்டார இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர் ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர் ஸ்டூவர்ட் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ஜாண் இக்னேஷியஸ், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா, திருவட்டார் மேற்கு வட்டார தலைவர் வினு டிராய், மாநில பொதுச்செயலாளர் தாரகை கத்பட், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மோகன்தாஸ், மேற்கு மாவட்ட சேவாதள தலைவர் காஸ்டன் கிளீட்டஸ், சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story